search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    குடியுரிமை சட்டம்: உ.பி. முழுவதும் வன்முறை - போலீசார், போராட்டக்காரர்கள் மோதல்

    உத்தர பிரதேசத்தில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக இன்று நடைபெற்ற போராட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது.
    லக்னோ:

    பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் மத ரீதியாக துன்புறுத்தப்பட்டு இந்தியாவுக்குள் அகதிகளாக வந்த இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்துள்ளது. 

    இந்த திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்த போராட்டங்கள் சில பகுதிகளில் வன்முறையாக உருவெடுத்து உள்ளது.

    இந்நிலையில், உத்திர பிரதேசம் மாநிலம்  கோரக்பூர் பகுதியில் இன்று ஜும்மா தொழுகையை முடித்துக்கொண்டு வெளியே வந்த மக்கள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

    உ.பி.யில் ஏற்பட்ட வன்முறையில் தீ வைக்கப்பட்ட கார்

    பின்னர் போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியும் சாலையில் நின்றுகொண்டிருந்த கார்கள், பைக்குகள் என தங்கள் கண்ணில் பட்டவற்றையெல்லாம் தீவைத்து கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர்.  

    இதனால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து போராட்டக்காரர்களை தடியடி நடத்தியும் கண்ணீர் புகை குண்டு வீசியும் போலீசார் விரட்டியடித்தனர். 

    உத்திர பிரதேசம் மாநிலத்தின் மீரட், பாக்ரேஜ், புலந்த்சாஹர், மிசாபர்நகர், கோரக்பூர் ஆகிய பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறிவருவதால் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து கைபேசி இண்டர்நேட் சேவை மேற்கண்ட பகுதிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது.  
    Next Story
    ×