search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாணவர்கள் - போலீசார் மோதல் நடந்த பகுதி
    X
    மாணவர்கள் - போலீசார் மோதல் நடந்த பகுதி

    கல்லூரி மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் - அவசர வழக்காக விசாரிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
    புதுடெல்லி:

    குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள்  நேற்று போராட்டம் நடத்தினர். அப்போது, அவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    டெல்லி போக்குவரத்து கழகத்தின் 4 பஸ்களை நேற்றிரவு ஒரு கும்பல் தீவைத்து கொளுத்தியது. இரு போலீஸ் வாகனங்கள் மற்றும் சில தனியார் வாகனங்களும் எரிக்கப்பட்டன. போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வன்முறையில் ஈடுபட்டவர்களை கலைத்தனர்.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பல்கலைக்கழக வளாகத்திற்குள் அனுமதியின்றி போலீசார் நுழைந்தனர். மாணவர்கள் மீது போலீசார் மூர்க்கத்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும் துப்பாக்கியால் சுட்டதாகவும் மாணவர்கள் சங்கம் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது.

    போலீசார் தாக்குதல்

    இந்நிலையில், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல் தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் இன்று வழக்கு தொடரப்பட்டது.

    போலீசாரின் தாக்குதல் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும்.  காயமடைந்த மாணவர்களுக்கு தரமான சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்ற டெல்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல் தலைமையிலான அமர்வு ‘இவ்விவகாரத்தில் அவசரம் அவசியமல்ல’ என்று தெரிவித்தது.

    Next Story
    ×