search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மந்தர் தொகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்
    X
    மந்தர் தொகுதியில் வாக்களிக்க வரிசையில் நின்ற வாக்காளர்கள்

    ஜார்க்கண்ட் 2ம் கட்ட தேர்தல்- 9 மணி வரை 13 சதவீத வாக்குப்பதிவு

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணிவரை 13 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டமாக 13 தொகுதிகளுக்கு நவம்பர் 30-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இன்று இரண்டாவது கட்டமாக 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்காளர்கள் காலையிலேயே ஆர்வத்துடன் வந்து வாக்குகளை பதிவு செய்தனர்.

    காலை 9 மணி நிலவரப்படி 13.03 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதன்பின்னர் வாக்குப்பதிவு மேலும் விறுவிறுப்படைந்தது. ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்கின்றனர். 

    இந்த இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில், முதல்வர் ரகுபர் தாஸ், சபாநாயகர் தினேஷ ஓரான், மாநில மந்திரிகள் நீல்காந்த் சிங் முண்டா, ராமச்சந்திர சாகிஸ், பாஜக மாநில தலைவர் லட்சுமணன் கிலுவா உள்ளிட்ட 260 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சபாநாயகர் தினேஷ் ஓரான் (சிசாய்), ஊரக வளர்ச்சித்துறை மந்திரி நீல்காந்த் சிங் முண்டா (குந்தி), பாஜக மாநில தலைவர் லசுமணன் கிலுவா (சக்ரதார்பூர்) ஆகியோர் காலையியே வாக்குச்சாவடிக்கு சென்று ஓட்டு போட்டனர்.

    தேர்தல் அமைதியாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்வதற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பெரும்பாலான தொகுதிகள் மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட தொகுதிகள் என்பதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. 

    இன்று தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் 2 தொகுதிகளில் மட்டும் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 18 தொகுதிகளில் மாலை 3 மணிக்கு வாக்குப்பதிவு நிறுத்தப்படும்.  குளிர்காலத்தில் பகல் நேரம் குறைவாக இருப்பதால், தொலைதூர பகுதிகளில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்ல ஏதுவாக 3 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 
    Next Story
    ×