search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சே
    X
    பிரதமர் மோடி, கோத்தபய ராஜபக்சே

    பயங்கரவாதத்தை ஒடுக்க இலங்கைக்கு ரூ.359 கோடி உதவி -மோடி

    இலங்கையில் பயங்கரவாத சதிச்செயல்களை முறியடிக்க ரூ.359 கோடி நிதி உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சேயின் தம்பி கோத்தபய ராஜபக்சே (வயது 70), பொது ஜன பெரமுனா கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் கடந்த 19ம் தேதி அதிபராக பதவி ஏற்றார். கோத்தபய ராஜபக்சேவுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததுடன், இந்தியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

    இதையடுத்து 3 நாள் சுற்றுப்பயணமாக கோத்தபய ராஜபக்சே நேற்று மாலை இந்தியா வந்தார். தலைநகர் டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் டெல்லியில் உள்ள ஐதராபாத் மாளிகையில் பிரதமர் மோடியும் கோத்தபய ராஜபக்சேவும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘இலங்கையில் பயங்கரவாதத்தை ஒடுக்க ரூ.359 கோடி நிதி (50 மில்லியன் டாலர்கள்) அளிக்கப்படும். இலங்கையின் கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்காக 400 மில்லியன் டாலர் வழங்கப்படும். கோத்தபய தலைமையிலான புதிய அரசு ஈழத்தமிழர்களின் நலனுக்காக செயல்படும் என உறுதியாக நம்புகிறேன்’, என்றார்.
    Next Story
    ×