search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேர்தல் அதிகாரிகள்
    X
    தேர்தல் அதிகாரிகள்

    தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நாளை ஜார்க்கண்ட் பயணம்

    ஜார்க்கண்ட் சட்டசபைக்காக தேர்தல் பணிகள் தொடர்பாக ஆய்வு செய்ய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா உள்ளிட்டோர் நாளை அங்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
    ராஞ்சி:

    81 இடங்களை கொண்ட ஜார்க்கண்ட் மாநில சட்டசபைக்கு நவம்பர் 30 முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
     
    முதல்கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 30-ம் தேதியும் இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 7-ம் தேதியும், மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 12-ம் தேதியும் நான்காம்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 16-ம் தேதியும் நடைபெறும். டிசம்பர் 20-ம் தேதி ஐந்தாவது இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

    ஐந்து கட்டங்களிலும் பதிவான வாக்குகள் டிசம்பர் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகிவிடும்.

    இதற்கிடையே, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் அசோக் லவாசா மற்றும் சுஷில் சந்தர் உள்ளிடோரும் நாளை ஜார்க்கண்ட் மாநிலத்தில் பயணம் செய்கின்றனர்.

    சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யும் தேர்தல் அதிகாரிகள், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் ஆய்வு நடத்த உள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×