என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கர்நாடக இடைத்தேர்தலில் மும்முனை போட்டி - மதச்சார்பற்ற ஜனதா தளம் வேட்பாளர்களை அறிவித்தது
பெங்களூரு:
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி அரசு 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவால் கவிழ்ந்தது. அதன்பின்னர் எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது.
கொறடா உத்தரவை மீறியதாக 15 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களை அப்போதைய சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் 2023 -ம் ஆண்டு வரை அவர்கள் தேர்தலில் போட்டியிட தடையும் விதித்தார்.
இதை எதிர்த்து 17 தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட்டு 17 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்று உத்தரவிட்டது. ஆனால், அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கான தடையை ரத்து செய்தது.
கர்நாடகாவில் ராஜினாமா செய்த 15 எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற டிசம்பர் 5-ந்தேதி நடக்கிறது. இதில் குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.
இதனால் இடைத்தேர்தலில் பா.ஜனதா, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது. தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி இடைத்தேர்தலில் 10 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இடைத்தேர்தலில் நாங்கள் களம் காண்கிறோம். இனிமேலும் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம். மக்கள் முன்பு காங்கிரஸ், பா.ஜனதா, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளின் செயல்பாடுகளை பற்றி விவாதிப்போம் என்றார்.
இதற்கிடையே தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் ரோஷன் பெயகைத் தவிர 16 பேர் பா.ஜனதாவில் இணைந்தனர்.
இதில் இடைத்தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிட தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்கள் 13 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா எம்.பி. சீனிவாசபிரசாத் மைசூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் இணைந்து இருப்பதால், கட்சியில் சில குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளது. இந்த குழப்பம் நீண்டகாலம் பா.ஜனதாவில் நீடிக்காது.
இடைத்தேர்தல் நடக்க விருக்கும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பா.ஜனதாவினர் ஒன்றிணைந்து வேலை செய்வதன் மூலம் குழப்பம் நீங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்