search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு
    X
    கவர்னர் கிரிஷ் சந்திரா மர்மு

    ஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு 2 ஆலோசகர்கள் நியமனம்

    ஜம்மு-காஷ்மீர் கவர்னருக்கு நிர்வாக ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கு 2 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்து உள்ளது.
    புதுடெல்லி:

    காஷ்மீர் மாநிலம் சமீபத்தில் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிந்தது. இதில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணைநிலை கவர்னராக கிரிஷ் சந்திரா மர்மு பதவியேற்று உள்ளார். இவருக்கு நிர்வாக ரீதியான ஆலோசனைகளை வழங்குவதற்கு 2 அதிகாரிகளை மத்திய அரசு நியமித்து உள்ளது.

    அதன்படி முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி பரூக் கான், முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.கே.சர்மா ஆகிய இருவரும் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை கவர்னரின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் இருவரும் முந்தைய காஷ்மீர் மாநிலத்தின் கவர்னர் சத்யபால் மாலிக்கின் ஆலோசகர்களாக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×