என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
என் குடும்பத்தினரை பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சகோதர, சகோதரிகளுக்கு நன்றி - ராகுல் காந்தி
Byமாலை மலர்8 Nov 2019 3:11 PM GMT (Updated: 8 Nov 2019 3:21 PM GMT)
என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி:
என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த ’எஸ்.பி.ஜி.’ எனப்படும் சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாதுகாப்பை பலமுறை மீறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
’எஸ்.பி.ஜி.’க்கு மாற்றாக ‘சி.ஆர்.பி.எப்.’ எனப்படும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு இவர்களுக்கு இந்தியா முழுவதும் அளிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க இத்தனை ஆண்டுகளாக களைப்பின்றி உழைத்த சகோதர, சகோதரிகளுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் இன்றிரவு வெளியிட்டுள்ள பதிவில், ‘என்னையும் எனது குடும்பத்தினரையும் பாதுகாக்க களைப்பின்றி உழைத்த சிறப்பு பாதுகாப்பு படை சகோதர, சகோதரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களது அர்ப்பணிப்புணர்வு, அன்பு மற்றும் படிப்பினை அடிப்படையில் நீங்கள் தொடர்ந்து அளித்த ஆதரவு ஆகியவற்றும் நன்றி. உங்களின் எதிர்காலம் சிறப்பாக அமையை நல்வாழ்த்துக்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×