search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுப்ரீம் கோர்ட்
    X
    சுப்ரீம் கோர்ட்

    சுப்ரீம் கோர்ட்டு புதிய தலைமை நீதிபதி ஆகிறார், எஸ்.ஏ.பாப்டே

    மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை அடுத்த சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்க ரஞ்சன் கோகாய் பரிந்துரை செய்துள்ளார்.
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அடுத்த மாதம் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். மரபுப்படி, தனக்கு அடுத்து வர உள்ள தலைமை நீதிபதியை பணிமூப்பு அடிப்படையில், தலைமை நீதிபதி பரிந்துரை செய்வது வழக்கம்.

    அந்த அடிப்படையில், மூத்த நீதிபதி எஸ்.ஏ.பாப்டேவை அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்க அவர் பரிந்துரை செய்து, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளார்,

    இந்த பரிந்துரையை பிரதமரிடம் மத்திய சட்ட மந்திரி முன்வைப்பார். இதுதொடர்பாக ஜனாதிபதிக்கு பிரதமர் ஆலோசனை வழங்குவார். அதன்பிறகு எஸ்.ஏ.பாப்டே புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார். அவர் நவம்பர் 18-ந் தேதி பதவி ஏற்பார் என்று தெரிகிறது. அவர் இப்பதவியில் 18 மாதங்கள் இருப்பார்.
    Next Story
    ×