search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதான பயங்கரவாதி மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி
    X
    கைதான பயங்கரவாதி மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி

    அல் கொய்தா பயங்கரவாதி ஜார்கண்ட் மாநிலத்தில் கைது

    இந்தியாவில் சதி வேலைக்கு திட்டமிட்டுத்தரும் அல் கொய்தா இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதியை ஜார்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் போலீசார் கைது செய்தனர்.
    ராஞ்சி:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் தாக்குதலுக்கு பழி வாங்கும் வகையில் அந்த நாசவேலைக்கு காரணமான அல் கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவன் ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானுக்குள் புகுந்து அமெரிக்கா கடற்படையை சேர்ந்த சீல் படையினர் சுட்டுக் கொன்றனர்.

    ஒசாமா பின்லேடன்

    அவனது மரணத்துக்கு பின்னர் அல் கொய்தா பயங்கரவாத இயக்கம் சற்று தொய்வடைந்தது போல் காணப்பட்டாலும் உலகம் முழுவதும் இந்த குழுவினர் மறைமுகமாக உலகம் முழுவதும் சதிவேலைகளுக்கு திட்டமிட்டு, தாக்குதல் நடத்துகின்றனர்.

    அவ்வகையில், அல் கொய்தாவுக்கான இந்திய துணைக்குழுவில் தொடர்புடைய மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி என்பவன் பல பயங்கரவாத வழக்குகளில் தொடர்புடையவன்.

    ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் நகரில் உள்ள ஆசாத் நகரை சேர்ந்த மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி-யை பல வழக்குகள் தொடர்பாக போலீசார் கடந்த மூன்றாண்டுகளாக தேடி வந்தனர். அவன் பிடிபடாததால் சொத்துகளை போலீசார் முடக்கி வைத்துள்ளனர்.

    இந்நிலையில், டாட்டாநகர் ரெயில் நிலையம் அருகாமையில் மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி நடமாடுவதாக பயங்கரவாத ஒழிப்பு சிறப்பு போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. விரைந்துசென்ற போலீசார் அவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    இளைஞர்களை மூளைச்சலவை செய்து பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி பயங்கரவாத பயிற்சி அளிக்கும் தரகராகவும் செயல்பட்டு வந்த மொஹம்மத் கலிமுதீன் முஸாஹிரி, பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பாக முன்னர் சவுதி அரேபியா, ஆப்பிரிக்கா, வங்காளதேசம், கொல்கத்தா, குஜராத், மும்பை ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
    Next Story
    ×