search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா
    X
    உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா

    உள்துறை மந்திரி அமித் ஷாவுடன் மம்தா பானர்ஜி சந்திப்பு

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார்.
    புதுடெல்லி:

    திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் இன்று மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது மேற்கு வங்க மாநிலத்தை பங்களா என பெயர் மாற்றம் செய்வது தொடர்பான கோரிக்கையை முன்வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நேற்று பிரதமர் மோடியை சந்தித்தபோதும், இதே கோரிக்கையை மம்தா முன்வைத்தார்.

    அரசியலில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் எதிரெதிர் துருவங்களாக உள்ளன. இரண்டு கட்சி தலைவர்களும் ஒருவரையொருவர் விமர்சனம் செய்து வந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

    சட்டவிரோத குடியேறிகள் அனைவரையும் வெளியேற்றுவதற்கு, அசாமில் உள்ளது போன்று நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்க வேண்டியது அவசியம் என்று அமித் ஷா கூறியிருந்தார். அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என பாஜக மற்றும் மோடி அரசுக்கு மம்தா தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×