search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மைசூருவில் புகழ்பெற்ற தசரா விழா 29-ந் தேதி தொடங்குகிறது

    வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.
    மைசூரு:

    வரலாற்று சிறப்புமிக்க மைசூரு தசரா விழா இந்த மாதம் 29-ந் தேதி தொடங்கி அக்டோபர் 8-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    10 நாட்கள் நடைபெறும் இந்த கோலாகல திருவிழாவின் கடைசி நாளான விஜயதசமி நாளில் பிரமாண்ட யானை ஊர்வலம் நடத்தப்படுகிறது. அர்ஜுனா என்ற யானை மீது 400 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி தேவியை அமர்த்தி ஊர்வலமாக எடுத்து செல்லப்படுகிறது. அர்ஜுனாவுடன் மேலும் 10 யானைகள், 50-க்கும் மேற்பட்ட குதிரைகள் அணிவகுத்து செல்கிறது.

    கர்நாடக மாநிலத்தில் 30 மாவட்டங்கள் மட்டும் இல்லாமல் பல துறைகளின் சார்பில் அலங்கார ஊர்த்திகள், 50-க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் ஊர்வலத்தில் நடக்கிறது.

    இந்த விழாவிற்காக பல முகாம்களில் இருந்து மைசூரு வந்து உள்ள தசரா யானைகளுக்கு தினமும் நடைபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தினமும் குளியல், ஊர்வலம் செல்லும் சாலைகளில் அழைத்துச் சென்று பழக்கப்படுத்துவது, மருத்துவ பரிசோதனைகள் நடந்த வண்ணம் உள்ளது. மேலும் சத்துள்ள உணவுகள் வழங்கப்பட்டு சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    தசரா விழாவில் உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவை சிறப்பு விருந்தினராக பங்கேற்க கர்நாடக முதல்-மந்திரி எடியூரப்பா அழைப்பு விடுத்து உள்ளார்.
    Next Story
    ×