search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப.சிதம்பரம்
    X
    ப.சிதம்பரம்

    ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக ப.சிதம்பரத்திடம் நடத்திய விசாரணை தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்தது.
    புதுடெல்லி:

    ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை சிபிஐ கைது செய்து காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறது. அவரது விசாரணைக் காவல் இன்றுடன் முடிவடைய உள்ளது.

    இதற்கிடையே, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ப.சிதம்பரம் கைது செய்யப்படலாம் என்பதால், முன்ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ப.சிதம்பரத்தை செப்டம்பர் 5-ம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்துள்ளது. அவரது முன்ஜாமீன் தொடர்பான வழக்கின் தீர்ப்பையும் அன்றைய தினத்திற்கு ஒத்தி வைத்துள்ளது.

    உச்ச நீதிமன்றம்

    இந்நிலையில், ப.சிதம்பரம் தொடர்பான ஆவணங்களை உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை இன்று தாக்கல் செய்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக, ப.சிதம்பரத்திடம் இதற்கு முன்பு நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள், அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் என அனைத்து விவரங்களையும் சீலிட்ட கவரில் வைத்து தாக்கல் செய்துள்ளது.

    இந்த விசாரணை விவரங்களை நீதிபதிகள் ஆய்வு செய்ய உள்ளனர். இதில் உள்ள அம்சங்கள் மற்றும் இருதரப்பு வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் வரும் 5-ம் தேதி நீதிபதிகள் தீர்ப்பு வழங்க உள்ளனர். 
    Next Story
    ×