என் மலர்

  செய்திகள்

  மின்சாரம் தாக்கி பலி
  X
  மின்சாரம் தாக்கி பலி

  கர்நாடகாவில் மின்சாரம் தாக்கி 5 மாணவர்கள் பரிதாப பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவர்கள் விடுதியில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை அகற்ற முயன்றபோது மின்சாரம் தாக்கியதில் 5 மாணவர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது.
  பெங்களூரு:

  கர்நாடகா மாநிலத்தின் கோப்பல் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தங்கியிருக்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுதந்திர தினத்தன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது.

  இந்நிலையில், மாணவர் விடுதியில் ஏற்றப்பட்ட தேசிய கொடியை இறக்க மாணவர்கள் முயற்சித்தனர். அப்போது மேலே சென்ற மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்தது. இந்த விபத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

  தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  இதுதொடர்பாக முதல் மந்திரி எடியூரப்பா கூறுகையில், மாணவர்கள் மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். மேலும், மின்சாரம் தாக்கி பலியான மாணவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் தரப்படும் என அறிவித்துள்ளார்.
  Next Story
  ×