என் மலர்

  செய்திகள்

  கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தபோது எடுத்த படம்
  X
  கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தபோது எடுத்த படம்

  பா.ஜ.க.வில் இணைந்த முன்னாள் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  டெல்லியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. கபில் மிஸ்ரா பாஜகவில் இணைந்தார்.
  புதுடெல்லி:

  டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த கட்சியின் எம்எல்ஏவான கபில் மிஸ்ரா (கரவால் நகர் தொகுதி), சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சபாநாயகரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த சபாநாயகர், எம்எல்ஏ கபில் மிஸ்ராவை சமீபத்தில் தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

  இந்நிலையில், கபில் மிஸ்ரா இன்று பாஜகவில் இணைந்தார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாஜக தலைவர் மனோஜ் திவாரி, விஜய் கோயல் ஆகியோர் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். அவரை பாஜக தலைவர்கள் வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர். 

  இதேபோல் ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×