search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    வெறுப்புணர்வை பரப்பி மக்களை பிரிக்கிறது பாஜக- அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

    பா.ஜனதா, வெறுப்புணர்வை பரப்பி, மக்களை பிளவுபடுத்துகிறது என்று சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்.
    எடாவா :

    உத்தரபிரதேச மாநிலம் எடாவாவில் நடைபெற்ற ‘ரக்‌ஷா பந்தன்’ நிகழ்ச்சியில், சமாஜ்வாடி கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

    தேர்தலின்போது, பா.ஜனதா தலைவர்கள், பொறாமை, வெறுப்புணர்வை பரப்பி ஆட்சியை பிடித்தனர். நல்ல உடை அணிந்து, பொய் சொல்பவர்களை மக்களும் நம்பி விட்டனர்.

    இப்போதும் பா.ஜனதா, வெறுப்புணர்வை பரப்பி, மக்களை பிளவுபடுத்துகிறது. ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய ‘பிரித்தாளும் கொள்கை’யை அவர்களும் பின்பற்றுகிறார்கள். முன்பெல்லாம் வேலை எளிதாக கிடைத்தது. ஆனால், இடஒதுக்கீடு காரணமாக, இளைஞர்கள் கடுமையாக போராட வேண்டியுள்ளது.

    சமாஜ்வாடி தொண்டர்கள் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும். கட்சியின் கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அகிலேஷ் யாதவ் பேசினார். 
    Next Story
    ×