search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாதிரி புகைப்படம்
    X
    மாதிரி புகைப்படம்

    ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு

    ஜம்மு-காஷ்மீரில் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் தெரிவித்துள்ளார்.
    காஷ்மீர்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை சமீபத்தில் மத்திய அரசு ரத்து செய்தது. அம்மாநிலத்தை லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீர் என  இரண்டாக பிரித்து யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது. இதையடுத்து, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றிய போது ஜம்மு-காஷ்மீரில் திரைத்துறையினர் படப்பிடிப்பை நடத்த வாருங்கள். அப்பகுதியில் தொழில் தொடங்க முதலீடு செய்யுங்கள் என தொழில் அதிபர்களுக்கு அழைப்புவிடுத்தார்.

    வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் என்.கே.சௌதரி
     
    இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரில் வரும் அக்டோபர் மாதம் 12 முதல் 14-ம் தேதி வரை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளதாக வர்த்தக மற்றும் தொழில்துறை முதன்மை செயலாளர் என்.கே.சௌதரி தெரிவித்துள்ளார். முதலீட்டாளர்கள் மாநாட்டின் தொடக்க விழா அக்டோபர் 12-ம் தேதி ஸ்ரீநகரில் நடைபெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

    முதலீட்டாளர்கள் மாநாடு ஜம்மு-காஷ்மீரில் நடைபெறுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
    Next Story
    ×