search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகர்புறத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி
    X
    நகர்புறத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ள காட்சி

    கேரளாவில் மழை, வெள்ளம், நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

    கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது.

    கேரளாவில் கடந்த சில தினங்களாக பரவலாக பெய்து வரும் கனமழையால் மாநிலம் முழுவதும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழையால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

    மழை வெள்ளத்தில் முக்கிய சாலைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ரெயில் சேவை மற்றும் விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கேரளா மாநிலத்தில் வயநாடு, பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்னாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

    இதனால் கடலோர மாவட்டங்கள் உள்பட பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. அதிகமான சேதத்தை எதிர்கொண்டுள்ள வயநாடு மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன.

    வெள்ளம் சூழ்ந்த வயநாடு மாவட்டம்
     
    இதற்கிடையே, மலப்புரம் மாவட்டத்தில் கடந்த 8-ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20 சிறுவர்கள் உட்பட 59 பேர் சிக்கினர். மோசமான வானிலை நிலவுவதால் அங்கு மீட்பு பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

    மலப்புரம் கவளப்பாறை பகுதியில் நிலச்சரிவால் குடியிருப்புகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் மூன்றாவது நாளாக மாயமானோரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது.  நிலச்சரிவில் சிக்கி மாயமான 9 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மிகவும் ஆபத்தான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் விமானப்படை வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேரள மாநிலத்தின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் இன்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×