search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பப்ஜி
    X
    பப்ஜி

    பப்ஜியை தடை செய்யலாமா? -அருணாசல பிரதேச அரசு தீவிர ஆலோசனை

    ஆன்லைன் கேமாக இருக்கும் பப்ஜியினை தடை செய்வது குறித்து அருணாசல பிரதேசம் மாநில அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
    குவாகத்தி:

    இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் பப்ஜி கேம் வைரலாக பரவி வருகிறது. இதுவரை வெளிவந்த மொபைல் 'கேம்'களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    கல்லூரி பெண்கள் மத்தியில் 'பப்ஜி' விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது. கேம் விளையாடுவதை தடுத்தால் அவர்களுக்கு கட்டுப்படுத்த முடியாத கோபம் ஏற்பட்டு விபரீதத்தில் முடிகிறது. இந்த கேம் பல உயிர்களை காவு வாங்கி உள்ளது.

    அவ்வகையில் கடந்த மே மாதம் மத்திய பிரதேச மாநிலத்தில், தொடர்ந்து 6 மணி நேரம் பப்ஜி கேம் விளையாடிய 12ம் வகுப்பு மாணவன், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதனையடுத்து மும்பையில் வாலிபர் ஒருவர் பப்ஜி விளையாடுவதற்கு செல்போன் வாங்கி தர பெற்றோர் மறுத்ததால், தற்கொலை செய்தார். இத்தனை பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த கேமுக்கு ஏற்கனவே ஈராக், நேபாளம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளன.

    அருணாசல பிரதேச அரசு

    இந்நிலையில், அருணாசல பிரதேசத்திலும் பெற்றோர்கள் பப்ஜி குறித்து புகார் அளித்த நிலையில், அம்மாநில அரசு பப்ஜியை தடை செய்யலாமா? என தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. இது குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுக்கும், மாநில தொழில்நுட்ப துறையிடமும் ஆலோசனை கேட்டுள்ளது.

    இந்த ஆலோசனையின் முடிவில், பப்ஜியை தடை செய்யலாமா? அல்லது கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? என்பது குறித்து விரைவில்  தீர்மானம் செய்யப்படும் என அருணாசல பிரதேச அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





    Next Story
    ×