search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ப சிதம்பரம்
    X
    ப சிதம்பரம்

    சொமாட்டோ நிறுவனத்துக்கு ஆதரவளித்த ப.சிதம்பரம்

    சொமாட்டோ வாடிக்கையாளர் மதத்தை காரணம் காட்டி உணவை கேன்சல் செய்ததற்கு, அந்நிறுவனம் பதிலடி கொடுத்தது. இதனை ஆதரித்து முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.
    ஜாபல்பூர்:

    மத்திய பிரதேசம் மாநிலத்தின் ஜாபல்பூர் பகுதியில் சொமாட்டோ நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர், உணவை கேன்சல் செய்துள்ளார். இந்த உணவை ஆர்டர் செய்தவர் ஒரு இந்து.

    எனவே, ஆர்டர் செய்த உணவை இந்து அல்லாத ஒருவர் எடுத்து வந்து டெலிவரி செய்வார் என்பதால், அதனை கேன்சல் செய்துள்ளார். மேலும் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘தற்போதுதான் சொமாட்டோவில் ஆர்டர் செய்த உணவை கேன்சல் செய்தேன்.

    எனது உணவிற்கு இந்து அல்லாத ஒருவரை டெலிவரி பாயாக அனுப்பியுள்ளனர். வேறு ஒருவரை மாற்ற முடியாது என்றும் கூறினர். மேலும் டெலிவரிக்கான பணத்தை திருப்பிக் கொடுக்க முடியாது என கூறினர். எனவே, எனது ஆர்டரை கேன்சல் செய்து, அந்த பணம் எனக்கு தேவையில்லை என கூறிவிட்டேன்’ என பதிவிட்டிருந்தார்.

    இதற்கு பதிலடி கொடுத்த சொமாட்டோ இந்தியா நிறுவனம் அவர் வெளியிட்ட பதிவை, தன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து, ஒரே வரியில், ‘உணவுக்கு மதமில்லை’ என குறிப்பிட்டிருந்தது.

    இந்த பதிலுக்காக இந்தியா முழுவதும் உள்ள மக்கள், ஓட்டல் உரிமையாளர்கள் சொமாட்டோ நிறுவனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில், 'இதுவரை உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டது இல்லை.

    ஆனால், இனி சொமாட்டோவில் இருந்து ஆர்டர் செய்து சாப்பிடுவேன் என நினைக்கிறேன்' என்று சொமாட்டோவுக்கு ஆதரவு தெரிவித்து பதிவிட்டுள்ளார்.



    Next Story
    ×