search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காங்கிரஸ் கட்சியினர் சாணம் ஊற்றி சுத்தம் செய்யும் காட்சி
    X
    காங்கிரஸ் கட்சியினர் சாணம் ஊற்றி சுத்தம் செய்யும் காட்சி

    பெண் எம்.எல்.ஏ போராட்டம் நடத்திய இடத்தில் சாணத்தை ஊற்றி கழுவியதால் பரபரப்பு

    கேரளாவில் பெண் எம்.எல்.ஏ ஒருவர், போராட்டம் நடத்திய இடத்தில் சாணத்தை ஊற்றி கழுவி காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள், சுத்தம் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரும், எம்.எல்.ஏவும் கீதா கோபி ஆவார். இவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவரது தொகுதிக்கு உட்பட்ட திரிப்பிரையார் பகுதியில் சாலைகள் சரிவர அமைக்ககோரி பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினார்.

    இதையடுத்து அதிகாரிகள், சாலைகள் விரைவில் சரி செய்யப்படும் என உறுதியாக கூறியதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கீதா, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த போராட்டத்திற்கு பின்னர் அங்கு வந்திருந்த காங்கிரஸ் கட்சியினர் கீதா போராட்டம் நடத்திய இடத்தை சாணத்தினை தண்ணீருடன் கலந்து ஊற்றி கழுவி சுத்தம் செய்துள்ளனர்.

    கீதா கோபி

    இது குறித்த தகவல் அறிந்த கீதா கூறுகையில், 'நான் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு சுத்தம் செய்துள்ளனர்' என குற்றம் சாட்டி கூறினார்.  இந்த சம்பவம் குறித்து காங்கிரசார் கூறுகையில், 'கீதா கூறிய காரணத்திற்காக இவ்வாறு செய்யவில்லை. அவர் மக்கள் மேல் அக்கறை காட்டுவதுபோல் இருந்துக்கொண்டு மக்களை முட்டாள்களாக்கிக் கொண்டிருக்கிறார்.

    இதனை வெளிப்படுத்தும் விதமாக இவ்வாறு செய்தோம்' என கூறினர். எனினும் இந்த செயலுக்காக பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து எழுந்த புகாரின் பேரில் எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×