search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடியூரப்பா
    X
    எடியூரப்பா

    எடியூரப்பா பதவியேற்பதற்கு 76 வயது குறுக்கே நிற்குமா?

    கர்நாடகாவில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது. வயது விவகாரம் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலை உள்ளது.
    பெங்களூரு:

    பாரதிய ஜனதாவில் 75 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு ஆட்சி ரீதியான பதவி எதுவும் வழங்குவதில்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏற்கனவே 75 வயதை கடந்து விட்ட முதல்-மந்திரிகள், மத்திய மந்திரிகள் பதவியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

    குஜராத் முதல்-மந்திரி ஆனந்திபென் பட்டேல் கூட இவ்வாறு தான் பதவியை இழந்தார். தற்போதைய மத்திய மந்திரி சபையில் கூட 75 வயதை கடந்தவர்கள் யாருக்கும் பதவி வழங்கவில்லை.

    ஆனால் கர்நாடகாவில் முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்படுவார் என எதிர் பார்க்கப்படும் எடியூரப்பாவுக்கு தற்போது 76 வயது ஆகிறது.

    வயது விவகாரம் அவர் பதவி ஏற்பதில் சிக்கலை ஏற்படுத்தலாம் என்ற நிலை உள்ளது. 76 வயதில் அவர் பதவி ஏற்றால் இன்னும் 4 ஆண்டுகள் முதல்-மந்திரி பதவியில் இருக்க முடியும். அப்போது 80 வயது வரை அவர் பதவியில் இருப்பார்.

    இது கட்சி கொள்கைக்கு மாறுபாடானதாக இருக்கிறது. எனவே கொள்கையில் மாற்றத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயம் பாரதிய ஜனதா மேலிடத்திற்கு ஏற்பட்டுள்ளது.

    ஆனால் கர்நாடகாவில் பாரதிய ஜனதா ஆட்சி ஏற்படுவதற்கு காரணமாக எடியூரப்பாதான் இருந்தார். அவரை நம்பித்தான் அங்கு கட்சியே இருக்கிறது. எல்லோரும் அவரை பின்பற்றுபவர்களாக இருக்கின்றனர்.

    அப்படி இருக்க எடியூரப்பாவுக்கு பதவி வழங்காமல் இருக்க முடியாது. எனவே அரசியல், பதவியில் வயது வரம்பை பாரதிய ஜனதா தளர்த்திக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×