என் மலர்

  செய்திகள்

  எம்எஸ் டோனி
  X
  எம்எஸ் டோனி

  டோனி அப்படி சொன்னாரா?

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  2020 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தான் விளையாடுவது பற்றி டோனி இவ்வாறு கூறினாரா?
  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து எம்.எஸ். டோனியின் ஓய்வு அறிவிப்பு பற்றிய பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், கவலை வேண்டாம், 2020 டி20 உலக கோப்பை தொடரில் நிச்சயம் விளையாடுவேன் என்ற டோனியின் ட்வீட் ஃபேஸ்புக்கில் வைரலாகியுள்ளது.

  டோனியின் ட்வீட் உண்மைதானா என ஆய்வு செய்ததில், அது போலி ட்வீட் என்பது உறுதியாகியுள்ளது. எம்.எஸ். டோனியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் சமீப காலங்களில் எவ்வித பதிவையும் மேற்கொள்ளவில்லை.

  எம்.எஸ். டோனி விசிறிகள்

  எம்.எஸ். டோனி விசிறிகள் என்ற பெயர் கொண்ட ஃபேஸ்புக் பதிவில் இடம்பெற்றிருக்கும் ட்விட்டர் பதிவில்: அரையிறுதி போட்டி முடிவு இந்தியாவிற்கு ஏமாற்றம் அளித்திருப்பதையும், எனது ஓய்வு அறிவிப்பு பற்றிய கிண்டல்களையும் நான் அறிவேன். ஆனால் எனது அணியை இந்த நிலையில் விட்டுச் செல்வது சரியான முடிவாகாது. விசிறிகள் கவலை கொள்ள வேண்டாம். ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கும் 2020 ஐ.சி.சி. டி20 உலக கோப்பை தொடரில் நான் விளையாடுவேன். தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன், என குறிப்பிடப்பட்டுள்ளது.

  இந்த பதிவில் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றும் இருக்கிறது. இதனை பல ஆயிரம் பேர் பகிர்ந்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலககோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்துடன் விளையாடியது. இதில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது.

  எம்.எஸ். டோனி

  உலக கோப்பை போட்டிகளுக்கு பின் டோனி தனது ஓய்வை அறிவிப்பார் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது. இந்நிலையில், தனது ஓய்வு பற்றி டோனி எவ்வித தகவலும் வழங்காததால் இதுபோன்ற தகவல்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.

  இதுவரை டோனியின் ஓய்வு பற்றி எவ்வித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. டோனியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை ஆய்வு செய்ததில் மே 6 ஆம் தேதிக்கு பின் அவர் எவ்வித பதிவும் மேற்கொள்ளவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதேபோன்று அவரின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களிலும் எவ்வித தகவலையும் அவர் பதிவிடவில்லை.

  அந்த வகையில் டோனியின் கருத்து என சமூக வலைத்தளங்களில் வைரலாகும் பதிவுகளில் துளியும் உண்மையில்லை என்பது தெளிவாகியுள்ளது.
  Next Story
  ×