search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஓ பன்னீர்செல்வம், அமித் ஷா
    X
    ஓ பன்னீர்செல்வம், அமித் ஷா

    டெல்லியில் அமித்ஷாவுடன் இன்று ஓபிஎஸ் சந்திப்பு

    துணை முதல்-மந்திரியும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பாஜக தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.

    புதுடெல்லி:

    துணை முதல்-மந்திரியும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர் செல்வம் நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    ஓ.பன்னீர்செல்வம் இன்று பிற்பகல் பா.ஜனதா தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசுகிறார்.

    தற்போதைய அரசியல் நிலவரம் உள்பட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்து அமித் ஷாவிடம் அவர் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

    பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு முதல்-அமைச்சர் எடப்பாடி மற்றும் அமைச்சர்கள் பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவை சந்தித்து இருந்தனர்.

    கட்சியின் முக்கிய நிர்வாகிகள் அமித்ஷாவை அடுத்தடுத்து சந்தித்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் தனிப்பட்ட ரீதியில் சந்தித்து பேசவில்லை. இதற்காக அவர் இன்று சந்திக்கிறார்.

    Next Story
    ×