என் மலர்

  செய்திகள்

  ரம்யா ஹரிதாஸ்
  X
  ரம்யா ஹரிதாஸ்

  தொண்டர்களின் கார் பரிசை ஏற்க மறுத்த பெண் எம்.பி.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  காங்கிரஸ் கட்சி தலைவரின் கருத்துக்கு மதிப்பு அளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று பெண் எம்.பி. ரம்யா ஹரிதாஸ் கூறி உள்ளார்.
  திருவனந்தபுரம்:

  கேரள மாநிலம் ஆலத்தூர் தொகுதியில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் ரம்யா ஹரிதாஸ்.

  இளைஞர் காங்கிரஸ் உறுப்பினரான இவர் கேரளாவில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட ஒரே தலித் பெண் எம்.பி. என்ற சிறப்பை பெற்றவர். இளைஞர் காங்கிரசாரின் அபிமானத்தை பெற்றவராக ரம்யா ஹரிதாசுக்கு அந்த கட்சி தொண்டர்கள் கார் பரிசு வழங்க திட்டமிட்டனர்.

  இதற்காக காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் நன்கொடையாக ரூ.14 லட்சம் வசூலித்து காரையும் வாங்கினர். இளைஞர் காங்கிரஸ் உதய தினமான வருகிற ஆகஸ்டு 9-ந்தேதி அவருக்கு காரை பரிசளிக்க முடிவு செய்தனர்.

  பரிசாக வழங்க இருந்த கார்

  இதுபற்றி இளைஞர் காங்கிரசார் ரம்யா ஹரிதாசிடம் தெரிவித்தனர். அவரும் கார் பரிசை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும் அது பற்றி தனது பேஸ்புக்கிலும் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.

  இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவர் முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் கவனத்திற்கு இது கொண்டு செல்லப்பட்டது. ரம்யா ஹரிதாசுக்கு கார் பரிசளிப்பதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார். தொண்டர்களிடம் நன்கொடை வசூலித்து கார் பரிசு பெறுவது சரியல்ல. கார் வேண்டுமென்றால் கடன் பெற்று காரை வாங்கிக் கொள்ளலாம் என்று அவர் கூறியிருந்தார்.

  இதைத்தொடர்ந்து ரம்யா ஹரிதாஸ் தனது முடிவை மாற்றிக் கொண்டு உள்ளார். கட்சி தலைவரின் கருத்துக்கு மதிப்பு அளித்து கார் பரிசை தான் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்று அவர் கூறி உள்ளார். கட்சி தொண்டர்களின் ஆர்வத்திற்காக முதலில் நான் கார் பரிசை பெற சம்மதம் தெரிவித்தேன். அது சரி இல்லை என்று தலைமை கூறியதால் எனது முடிவை மாற்றிக் கொண்டேன் என்று பேஸ் புக்கில் அவர் தெரிவித்து உள்ளார்.

  பரிசளிப்பதற்காக வாங்கப்பட்ட காரை என்ன செய்வது என்பது பற்றி கட்சி நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்றும் அவர் கூறி உள்ளார்.  Next Story
  ×