search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பணத்தை பறிகொடுத்த ஈராக் நாட்டவர்கள்
    X
    பணத்தை பறிகொடுத்த ஈராக் நாட்டவர்கள்

    போலீஸ் போன்று நடித்து ஈராக்கைச் சேர்ந்தவர்களிடம் பணம் பறித்த கும்பல்

    நொய்டாவில் போலீஸ்காரர்கள் போன்று நடித்து ஈராக்கைச் சேர்ந்தவர்களிடம் பணத்தை பறித்துச் சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    நொய்டா:

    ஈராக் நாட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் உள்ள ஜேபி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அவருடன் அவரது சகோதரர்கள் இரண்டு  பேர் தங்கியிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மருத்துவமனைக்கு வெளியே சகோதரர்கள் இருவரும் நின்றபோது, அங்கு வந்த ஒரு கும்பல் போலீஸ் போன்று நடித்து மிரட்டி பணத்தை பறித்துச் சென்றுள்ளது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    ஈராக்கை சேர்ந்தவர்களிடம் கொள்ளை

    இதுபற்றி ஈராக் வாலிபர்களின் மொழிபெயர்ப்பாளர் அப்துல் வாரிஸ் கூறியதாவது:-

    ஈராக்கைச் சேர்ந்த இருவரும் மருத்துவமனைக்கு வெளியே நின்றபோது, சிலர் அவர்களிடம் வந்து போலீஸ் என்று கூறி அடையாள அட்டைகளை காட்டியுள்ளனர். அத்துடன், போதைப் பொருள் வைத்திருப்பதாக கூறி, அவர்களின் பையை சோதனையிட்டுள்ளனர். அப்போது, பையில் இருந்த 30 ஆயிரம் டாலர் பணத்தை எடுத்துள்ளனர். 

    பின்னர், இருவரையும் தள்ளிவிட்டு பணத்துடன் தப்பி ஓடியுள்ளனர். போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகளை ஆயவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×