search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகை ஊர்மிளா
    X
    நடிகை ஊர்மிளா

    மும்பை காங்கிரஸ் தலைவருக்கு நடிகை ஊர்மிளா எழுதிய கடிதம் வெளியானதால் சர்ச்சை

    மும்பை காங்கிரஸ் தலைவருக்கு நடிகை ஊர்மிளா எழுதிய கடிதம் வெளியானது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
    மும்பை :

    பாராளுமன்ற தேர்தலில் மும்பை வடக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நடிகை ஊர்மிளா போட்டியிட்டார். இவர் பா.ஜனதா வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் சுமார் 4½ லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியாகும் ஒரு வாரத்துக்கு முன் நடிகை ஊர்மிளா, அப்போது மும்பை காங்கிரஸ் தலைவராக இருந்த மிலிந்த் தியோராவுக்கு கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதம் தற்போது வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    நடிகை ஊர்மிளா அந்த கடிதத்தில், தனக்காக தேர்தல் பணியாற்றிய காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தேஷ் கோந்த்வில்கர், பூஷன் பாட்டீல் ஆகியோருக்கு எதிராக கருத்துகளை குறிப்பிட்டு உள்ளார். நடிகை புகார் கூறிய 2 பேரும் முன்னாள் மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபத்துக்கு நெருக்கமானவர்கள் ஆவர்.

    இந்தநிலையில் கட்சி தலைமைக்கு எழுதிய கடிதம் வெளியான விவகாரம் குறித்து நடிகை ஊர்மிளா அதிருப்தி தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘முக்கிய தகவல்கள் அடங்கிய ரகசிய கடிதம் வெளியில் கசிந்தது துரதிருஷ்டவசமானது. எல்லா கட்சிகளுக்கும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் இருக்கும். சுயநலத்துக்காக இல்லாமல் நாட்டின் முன்னேற்றத்துக்காகவே நான் காங்கிரசில் சேர்ந்தேன்.

    தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வரும் முன்னே அந்த கடிதத்தை எழுதியிருந்தேன்’’ என்றார்.
    Next Story
    ×