search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கணவருடன் சொப்னா.
    X
    கணவருடன் சொப்னா.

    அபுதாபி லாட்டரியில் கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு

    கணவருக்கு தெரியாமல் அபுதாபி லாட்டரி சீட்டு வாங்கிய கேரள பெண்ணுக்கு ரூ.22 கோடி பரிசு கிடைத்துள்ளது. லாட்டரி பணத்தின் ஒரு பகுதி மக்கள் நல உதவிகளுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.

    அபிதாபி:

    கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம். இவரது மனைவி சொப்னா. இவர்களுக்கு நட்சத்திரா என்ற 5 வயது மகள் இருக்கிறார்.

    இவர்கள் அனைவரும் ஐக்கிய அமீரகத்தின் அபு தாபியில் கடந்த 9 ஆண்டுகளாக குடும்பத்துடன் தங்கியுள்ளனர். சொப்னா அபுதாபியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக பணிபுரிகிறார்.

    அபிதாபியில் பிக் டிக்கெட் என்ற லாட்டரி சீட்டு குலுக்கல் சமீபத்தில் நடந்தது. அதில் சொப்னா வாங்கிய லாட்டரி சீட்டுக்கு ரூ.22 கோடியே 47 லட்சம் பரிசாக கிடைத்தது.

    இந்த லாட்டரி சீட்டை சொப்னா தனது கணவர் பிரேமுக்கு தெரியாமல் வாங்கியிருந்தார். அதற்கு பரிசு விழுந்த பிறகுதான் லாட்டரி வாங்கியது குறித்தும் அதற்கு பரிசு கிடைத்த தகவலையும் கூறினார்.

    இதனால் அவரது கணவர் மகிழ்ச்சி அடைந்தார். தனது மகள் நட்சத்திராவின் அதிர்ஷ்டமே இதுவரையிலான தங்களின் அனைத்து முன்னேற்றத்திற்கும் காரணம் என சொப்னா தெரிவித்தார்.

    லாட்டரி பணத்தின் ஒரு பகுதி மக்கள் நல உதவிகளுக்கு பயன்படுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். தற்போது வேலையை விடும் எண்ணம் இல்லை என்றும் அவர் கூறினார்.

    Next Story
    ×