search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கார்டூன் வீடியோவில் யோகா செய்யும் மோடி -பிரதமரின் யோகா தின முன்னோட்ட பதிவு
    X

    கார்டூன் வீடியோவில் யோகா செய்யும் மோடி -பிரதமரின் யோகா தின முன்னோட்ட பதிவு

    உலக யோகா தினம் வரும் 21ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கார்டூனில் யோகா செய்வது போல் உள்ள வீடியோவை பிரதமர் மோடி தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    புது டெல்லி:

    5000 ஆண்டுகள் பழமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா நாளாக ஆண்டின் ஒரு நாளை ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க வேண்டும் என பிரதமர் மோடி ஐ.நா. பொதுச்சபையில் 2014 செப்டம்பர் 27 அன்று வலியுறுத்தினார்.

    இதையடுத்து ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். அமெரிக்கா, கனடா, சீனா உட்பட பல உலக நாடுகள் மோடியின் பரிந்துரையை ஆதரித்தன. இதையடுத்து ஐ.நா ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.



    இந்நிலையில் பிரதமர் மோடி, திரிகோண ஆசனம் எனும் யோகா பயிற்சியினை தான்மேற்கொள்வது போல் கார்டூன் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

    மேலும் இந்த பதிவில் பிரதமர் மோடி கூறுகையில், 'வரும் 21ம் தேதி யோகா தினமாக கொண்டாட உள்ளோம். வாழ்க்கையின் முக்கிய அம்சமாக கருதி நீங்கள் அனைவரும் யோகா பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். யோகா செய்வதால் கிடைக்கும் பலன் எண்ணற்றது' என கூறியுள்ளார்.

    Next Story
    ×