search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்
    X

    தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு கிடையாது: சுப்ரீம் கோர்ட்

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் எந்தவிதமான இடஒதுக்கீடும் கிடையாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
    சிபிஎஸ்சி நடத்தும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு (CTET) ஜூலை மாதம் 7-ந்தேதி நடக்கிறது. கடந்த ஜனவரி மாதம் இதுகுறித்து சிபிஎஸ்சி விளம்பரம் செய்தது. அதில் ‘‘மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என ஒதுக்கீடு வழங்கப்படாது. எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற நடைமுறையே கடைபிடிக்கப்படும்’’ குறிப்பிட்டிருந்தது.

    சுப்ரீம் கோர்ட்டில் இந்த விளம்பரத்திற்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் ஜனவரி மாதம் 16-ந்தேதி பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் 10 சதவீதம் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்பது சுட்டிக்காட்டப்பட்டது.

    இந்த வழக்கை இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகிய நீதிபதிகள் தலைமையிலான பெஞ்ச் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் தகுதித் தேர்வுகளுக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது என தீர்ப்பு வழங்கியது.

    மேலும், அந்த பெஞ்ச் ‘‘தகுதிச் தேர்வுகளுக்கு எக்காரணம் கொண்டும் இடஒதுக்கீடு வழங்க இயலாம். அது முற்றிலும் தவறானதாகிவிடும். மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது முற்றிலும் தகுதியாவதற்கான தேர்வு மட்டுமே. இடஒதுக்கீடு என்ற நடைமுறை சேர்க்கையின்போது மட்டுமே கணக்கிடப்படும்’’ என்று குறிப்பிட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘‘எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு எந்தவொரு இடஒதுக்கீடும் கொடுக்கப்பட மாட்டாது என்று குறிப்பிட்டுள்ளது’’ என்று சுட்டிக்காட்டியுள்ளது.
    Next Story
    ×