search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்தோனேசியாவில் இன்று மாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி
    X

    இந்தோனேசியாவில் இன்று மாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி

    இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் இன்று மாலை அடுத்தடுத்து இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் பீதி அடைந்தனர். #Indonesiaearthquake #earthquake
    ஜகர்தா:

    பசிபிக் பெருங்கடல் பகுதியில் புவியியல் அமைப்பின்படி நிலநடுக்கங்களை அடிக்கடி சந்திக்கும் நெருப்பு வளையம் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள மென்ட்டாவாய் தீவுக்கு 117 கிலோமீட்டர் தென்கிழக்கே கடல் படுகைக்கு அடியில் 17 கிலோமீட்டர் ஆழத்தில் (இந்திய நேரப்படி) இன்று மாலை சுமார் மூன்று மணியளவில் இருமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

    முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 5.3 ரிக்டராகவும், பின்னர், சுமார் 25 நிமிடங்களுக்கு பின்னர் ஏற்பட்ட நிலநடுக்கம் 6 ரிக்டராகவும் பதிவானது. மென்ட்டாவாய் மாவட்டத்துக்குட்பட்ட கேபுலவான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகமாக உணரப்பட்ட இவ்விரு நிலநடுக்கங்களால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெருக்கள் உள்ளிட்ட திறந்தவெளிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இன்றையை நிலநடுக்கத்தால் உண்டான சேதம் மற்றும் இழப்புகள் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை. சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. #Indonesiaearthquake #earthquake  
    Next Story
    ×