search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தோனேசியா நிலநடுக்கம்"

    • ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.9 புள்ளிகளாக பதிவானது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

    ஆச்சே மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான சினாபாங்கிற்கு கிழக்கே 362 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உண்டானது. இது கடலுக்கடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது.

    சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சுனாமி ஆபத்து இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, தட்ப வெப்பநிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்தது. நில அதிர்வுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தது. ஆனால் மக்களிடம் சுனாமி பீதி ஏற்பட்டது. பலர் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர்.

    கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந்தேதி சுமத்ரா தீவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி பேரலை, இந்தியா உள்பட பல நாடுகளை தாக்கியது. இதில் 2.30 லட்சம் பேர் பலியானார்கள். இந்தோனேசியாவில் ஆச்சே மாகாணத்தில் அதிகமானோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் 19-வது நினைவு தினம் முடிந்த 3 நாட்களுக்கு பிறகு இந்தோனேசியாவில் நில நடுக்கம் ஏற்பட்டது.

    • நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.
    • சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவின் திமோர் தீவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நுசா தெங்கரா மாகாண தலைநகரான குபாங்வுக்கு வட-வடகிழக்கே 21 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவானது. 36 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

    நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். பல கட்டிடங்கள், வீடுகள் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    • இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் இன்று இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கெபுலாவான் பதுவில் இன்று அதிகாலை நில நடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 6.1 புள்ளிகளாக பதிவானது.

    நிலநடுக்கத்தால் வீடு, கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் அலறியடித்துபடி வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

    அதன் பின் சில மணி நேரங்களுக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் மக்கள் பெரும் பீதி அடைந்தனர்.

    முதல் நிலநடுக்கம் 43 கி.மீ. ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 40.கி.மீ. ஆழத்திலும் மையம் கொண்டிருந்ததாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை.

    இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது.
    • சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் சிராஞ்சங்-ஹிலிருக்கு வடமேற்கே 14 கி.மீ தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவானது. 123.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

    இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே மாகாணத்தில் சியாஞ்ச்சூர் நகரில் கடந்த மாதம் 21-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 374 பேர் பலியானார்கள். 600 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்து சிதறிய நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    • ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
    • இந்தோனேசியா நில அதிர்வு ஏற்படும் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவின் சுமத்ராவின் மேற்கு பகுதியில் மேற்கு கடற்கரையில் உள்ள மெண்டவாய் தீவுகளுக்கு அருகே இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகளில் 6.4 ஆக பதிவானதாக அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் இருந்தது. எனவே சுனாமி ஏற்பட வாய்ப்பு இல்லை என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சேதம் மற்றும் உயிர் சேதம் பற்றிய தகவல் உடனடியாக வெளியாகவில்லை.

    கடந்த திங்கட்கிழமை இதே இடத்தின் அருகே 5.2 ரிக்டர் அளவுகளில் 2 நிலநடுக்கம் ஏற்பட்டது. ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியா நில அதிர்வு ஏற்படும் பகுதியில் இருப்பதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதாக அந்நாட்டு புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இயற்கை பேரழிவுகளால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேஷியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவை சமீபத்தில் நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவான அந்த பயங்கர நிலநடுக்கத்தால், 170 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டு பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

    இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் இருந்து அந்நாடு மீண்டு வருவதற்குள் அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

    ஜவா மற்றும் பாலி தீவுகளில் இன்று ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை

    இதனால் மக்கள் பலரும் தங்களது வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கம் காரணமாக பொது மக்களுக்கோ அல்லது சொத்துகளுக்கோ எந்தவித சேதமும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. #Indonesiaquaketsunami
    இயற்கை சீற்றத்தால் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. #Indonesiaquaketsunami
    ஜகர்த்தா:

    இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் கடந்த வெள்ளியன்று 7.5 ரிக்டரில் நிலநடுக்கமும், 170 முறை நில அதிர்வுகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பலு, டோங்கலா பகுதிகளில் சுனாமி தாக்கியது.

    இந்த இயற்கை பேரழிவுகளால் இந்தோனேசியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பல கோடி மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. இயற்கையின் இந்த கோர தாண்டவத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியை துரிதப்படுத்த அந்நாட்டு அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இதற்கிடையே, தேவாலயம் ஒன்றின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மாணவர்கள் 36 பேரின் சடலங்களை மீட்புக்குழுவினர் இன்று மீட்டுள்ளனர். கடுமையாக பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கும் இந்தோனேசியாவுக்கு உதவிக்கரம் நீட்டுமாறு சர்வதேச நாடுகளுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ கோரிக்கை விடுத்துள்ளார்.

    இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள சும்பா எனும் தீவில் 40 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.

    சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் அந்த தீவில் வசித்து வரும் நிலையில், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. #Indonesiaquaketsunami
    சுனாமி, நிலநடுக்கத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ள இந்தோனேஷியாவிற்கு உதவ இந்தியா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிபரிடம் தொலைபேசி மூலம் பிரதமர் மோடி தெரிவித்தார். #PMModi #Indonesiaquaketsunami
    புதுடெல்லி :

    நாம் வாழும் பூமியில் நிலநடுக்கம், சுனாமி, எரிமலை வெடிப்பு என இயற்கை பேரிடர்கள் அதிகம் நடக்கிற நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. இந்த நாடு பசிபிக் நெருப்பு வளையத்தில் புவித்தட்டுகள் மோதிக்கொள்கிற இடத்தில் அமைந்துள்ளதால், எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கம் அடிக்கடி ஏற்படுகிறது.

    இந்நிலையில், கடந்த வெள்ளியன்று அந்த நாட்டின் சுலாவெசி மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி மாலை 6.02 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

    அங்கு 3 லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய டோங்கலா நகரை மையமாக கொண்டு பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளிகளாக பதிவானது.

    இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் என கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

    சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும்  சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல இடங்களில் சாலைகள் பெயர்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். பலரும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், திறந்தவெளியில் வைத்தபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

    பலு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகளுக்காக மட்டும் இங்கு விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் 4ம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வேண்டிய உதவிகளை செய்யும்படி இந்தோனேஷிய அதிபர் ஜகோ விடோடோ சர்வதேச நாடுகளுக்கு கோரிக்கை வைத்தார்.

    இந்தநிலையில், நிலநடுக்கம், சுனாமியில் உயிரிழந்தவர்களுக்காக இந்திய மக்கள் மற்றும் தனது சார்பில் தொலைபேசி மூலம் இந்தோனேஷிய அதிபர் ஜோகோ விடோடோவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். மேலும், இந்தோனேஷியாவின் தற்போதைய நிலவரம் பற்றி விசாரித்தார்.

    அந்நாட்டிற்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்ய இந்தியா தயாராக இருப்பதாக உறுதியளித்த மோடிக்கு விடோடோ நன்றி தெரிவித்தார் என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. #PMModi ##Indonesiaquaketsunami
    இந்தோனேசியாவின் லம்போக் தீவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ள நிலையில், தீவின் பூகோள அமைப்பில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. #LombokEarthquake
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் லாம்போக் தீவில் சமீபத்தில் 2 தடவை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 2-வது நில நடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பதிவானது.

    இதனால் பலத்த சேதம் ஏற்பட்டது. ஆயிரக் கணக்கான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாயின. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

    நிலநடுக்கத்தை தொடர்ந்து 100-க்கும் மேற்பட்ட நில அதிர்வுகள் அவ்வப்போது உருவாகி மக்களை அச்சுறுத்தின. இதனால் அஞ்சிய மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கியுள்ளனர். இடிபாடுகளை அகற்றி இறந்தவர் உடல்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இடிபாடுகளை அகற்றும் போது தொடர்ந்து உடல்கள் மீட்கப்படுவதாக நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ நெருங்கியுள்ளது.

    லாம்போ தீவில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதால் அந்த தீவு வழக்கத்தை விட 25 செ.மீ. அதாவது 10 இஞ்ச் உயர்ந்துள்ளது. இந்த தகவலை இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் தெரிவித்துள்ளது.

    அமெரிக்காவின் நாசா மற்றும் கலிபோர்னியா தொழில் நுட்ப நிறுவனத்தின் விஞ்ஞானிகள் செயற்கைகோள் போட்டோக்கள் மூலம் ஆய்வு நடத்தி இத்தகவலை வெளியிட்டுள்ளனர்.
    ×