இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Published on

இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா மாகாணத்தில் சிராஞ்சங்-ஹிலிருக்கு வடமேற்கே 14 கி.மீ தொலைவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.8 புள்ளிகளாக பதிவானது. 123.7 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் தலைநகர் ஜகார்த்தாவிலும் உணரப்பட்டது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியே ஓடி வந்து சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. இதே மாகாணத்தில் சியாஞ்ச்சூர் நகரில் கடந்த மாதம் 21-ந்தேதி நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 374 பேர் பலியானார்கள். 600 பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே இந்தோனேசியாவின் செமேரு எரிமலை வெடித்து சிதறிய நிலையில் தற்போது நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com