என் மலர்
செய்திகள்

இந்தோனேசியா நிலநடுக்கம், சுனாமி பலி 1763 ஆக உயர்வு - 5 ஆயிரம் பேரை காணவில்லை
இந்தோனேசியாவை துவம்சம் செய்த நிலநடுக்கம் மற்றும் சுனாமிக்கு பலியானோர் எண்ணிக்கை 1763 ஆக உயர்ந்துள்ள நிலையில் காணாமல் போன 5 ஆயிரம் பேரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. #Indonesiaearthquake
ஜகர்தா:
இந்தோனேசியாவில் கடந்த மாதம் 29-ம் தேதி சிலாவேசி தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து அங்குள்ள பலு நகரை சுனாமி தாக்கியது. இதனால் அந்நகரம் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அங்கிருந்த வீடுகள், கட்டிடங்கள், ஓட்டல்கள், வணிக வளாகங்கள் அனைத்தும் இடிந்து தரைமட்டமானது.
சுனாமி தாக்குதலில் பாதித்த பலு நகரில் நடைபெறும் மீட்பு பணிகளில் பேரிடர் மீட்பு படையினருடன் ராணுவமும், போலீசாரும் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி 1763 பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், சுனாமியால் அதிகம் பாதிக்கப்பட்ட பலரோவா மற்றும் பெட்டோபோ நகரங்களில் சுமார் 5 ஆயிரம் மக்களை காணவில்லை என அந்நாட்டின் பேரிடர் மீட்புத்துறை செய்தி தொடர்பாளர் சுட்டோப்போ புர்வோ நுக்ரோஹோ இன்று அறிவித்துள்ளார்.
மலையடிவாரங்களிலும், சகதிக்குள்ளும் சிக்கி கிடக்கும் பல பிரேதங்களை மீட்பதில் மிகுந்த சிரமங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். #5000missing #Indonesianquakezones #Indonesiaearthquake
Next Story






