search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெங்களூருவில் சாம்சங் நிறுவனம் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூம்
    X

    பெங்களூருவில் சாம்சங் நிறுவனம் அமைத்துள்ள உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூம்

    இந்தியா மொபைலுக்கு மிகபெரிய சந்தை என்பதால் அதனை குறிவைத்து பெங்களூருவில் பிரம்மாண்டமாக உலகின் மிகப்பெரிய ஷோரூமை சாம்சங் நிறுவனம் திறந்துள்ளது. #Samsung #Bengalore
    பெங்களூரு:

    கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியா மொபைல் போன்களுக்கான சிறந்த சந்தையாக இருந்து வருகிறது. இதனை குறிவைத்து பன்னாநாட்டு மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவிலேயே மொபைல்களை தயாரித்து வருகின்றன. இதனால், அத்தகைய நிறுவனங்களுக்குள் கடும் போட்டி இருக்கிறது. 

    இந்நிலையில், பெங்களூருவில் உலகின் மிகப்பெரிய மொபைல் ஷோரூமை சாம்சங் நிறுவனம் இன்று திறந்துள்ளது. 3 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஷோரூமை அந்நிறுவனத்தின் ஆசிய பிரிவு தலைவர் திறந்து வைத்தார். 

    ஏற்கனவே, இந்தியா முழுவதும் 2100 கிளைகளை கொண்டுள்ள சாம்சங், சமீபத்தில் நொய்டாவில் உலகின் மிகப் பெரிய மொபைல் உற்பத்தி மையத்தை திறந்தது. 

    சாம்சங் சமீபத்தில் வெளியிட்ட அனைத்து மொபைல்களும், இந்த ஷோரூமில் வைக்கப்பட்டுள்ளன. மேலும், மொபைல் சர்வீஸ் செண்டரும் இங்கேயே அமைக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×