search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 150 இடமே கிடைக்கும் - மம்தாபானர்ஜி
    X

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 150 இடமே கிடைக்கும் - மம்தாபானர்ஜி

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு 150 இடமே கிடைக்கும் என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார். #BJP #MamataBanerjee

    கொல்கத்தா:

    திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தியாகிகள் நினைவு தின பொதுக்கூட்டம் கொல்கத்தாவில் நடந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று அந்த கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி பேசியதாவது:-

    2019 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவின் பலம் வெகுவாக குறையும். உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் பா.ஜனதாவின் பலம் குறைந்து விடும்.

    பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் பா.ஜனதாவுக்கு 325 வாக்குகள் கிடைத்தன. ஆனால் பாராளுமன்ற தேர்தலில் இந்த எண்ணிக்கை 100 ஆக குறைந்து விடும். தேர்தலில் பா.ஜனதாவுக்கு 100 முதல் 150 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

    தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அ.தி.மு.க. வாக்குகளை பா.ஜனதா பெற்று இருக்க முடியாது. பா.ஜனதா தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருகிறது.

    மேற்கு வங்காளத்தில் 42 எம்.பி. தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெறும். இதற்கு நாம் உறுதி எடுக்க வேண்டும். நாட்டை பாதுகாக்க நமது மாநிலத்தில் பா.ஜனதாவை படுதோல்வி அடைய செய்ய வேண்டும்.

    தமிழ்நாட்டில் அ.தி.மு.க.வை மு.க.ஸ்டாலின் தோற்கடிப்பார். உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் யாதவும், மாயாவதியும் இணைந்து மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 50 இடங்களை கைப்பற்றுவார்கள். பா.ஜனதாவுக்கு மத்திய பிரதேசத்தில் 8 இடங்களும் (மொத்தம் 28), ராஜஸ்தானில் 5 தொகுதியும் (மொத்தம் 25) மட்டுமே கிடைத்து குஜராத்தில் ஒரு இடம் கூட கிடைக்காது.

    இதேபோல லல்லு பிரசாத் (பீகார்) நவீன் பட்நாயக் (ஒடிசா), அம்ரீந்தர் சிங் (பஞ்சாப்) ஆகியோர் தங்களது மாநிலங்களில் பா.ஜனதாவை வீழ்த்து வார்கள். இதனால் இன்று 300 சீட்டுடன் இருக்கும் அந்த கட்சி 2019 தேர்தலில் 150 ஆக குறைந்து விடும்.

    டெல்லியில் பா.ஜனதாவை எதிர்க்க காங்கிரஸ் எங்களிடம் ஆதரவு கேட்கிறது. ஆனால் கொல்கத்தாவில் எங்களை எதிர்க்கிறது. இரட்டை நிலையில் இருக்கும் அந்த கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #BJP #MamataBanerjee

    Next Story
    ×