search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி
    X

    மக்களவையில் ருசிகரம் - கடுமையாக தாக்கி விட்டு மோடியை கட்டி அணைத்த ராகுல் காந்தி

    நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, தனது உரைக்கு பின்னர் மோடியை கட்டிப்பிடித்து வாழ்த்து பெற்றார். #RahulHugsModi #NoConfidenceMotion
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் பாராளுமன்ற மக்களவையில் இன்று நடந்து வருகிறது. இந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அரசு மீதும் பிரதமர் மோடி மீதும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

    குறிப்பாக ரபேல் விமான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் ஒரு பொய்யர் என ராகுல் கூறினார். இதற்கு, பாஜக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன் காரணமாக அவையில் கூச்சல், குழப்பம் நிலவியது. இதனால், அவை சிறிது நேரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

    மீண்டும் அவை கூடியதும் ராகுல் காந்தி பேசினார். அப்போது, “ஒத்திவைக்கப்பட்ட இடைவேளையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்லாது உங்கள் கூட்டணி கட்சி எம்.பி.க்களும் வந்து என்னிடம் சரியான கேள்விகளை கேட்டீர்கள் என பாராட்டு தெரிவித்தனர்” என ராகுல் கூறினார்.

    தனது பேச்சில் மோடியை கடுமையாக ராகுல் தாக்கினாலும், பேசி முடித்ததும் நேராக மோடியின் இருக்கைக்கு சென்று அவரை கட்டி அணைத்தார். மோடியும் சிரித்துக்கொண்டே ராகுலின் கையை பிடித்து குலுக்கி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.
    Next Story
    ×