search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு - மத்திய மந்திரி தகவலுக்கு அதிமுக எம்.பி மறுப்பு
    X

    நீட் வினாத்தாள் தமிழ் மொழிபெயர்ப்பு - மத்திய மந்திரி தகவலுக்கு அதிமுக எம்.பி மறுப்பு

    நீட் தேர்வில் தமிழ் வினாத்தாள் மொழிபெயர்க்கப்பட்ட விவகாரத்தில், சிபிஎஸ் இ தாமாகவே மொழிபெயர்ப்பாளர்களை நியமித்துக் கொண்டதாக அதிமுக எம்.பி விஜிலா சத்தியானந்த் பேசினார். #MansoonSession #NEET
    புதுடெல்லி:

    மாநிலங்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. விஜிலா சத்யானந்த், நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களை தேர்வு எழுதுவதற்காக வேறு மாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்படுவதாகவும், இந்த நிலையை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜிலா சத்யானந்த் கேட்டுக்கொண்டார்.

    இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், இனி நீட் தேர்வுகளை அந்தந்த மாநிலங்களிலேயே எழுத ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். மேலும், நீட் தேர்வில் வினாத்தாள்களை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசே மொழிபெயர்ப்பாளர்களை நியமித்ததாக மந்திரி கூறினார்.

    இதற்கு பதிலளித்த விஜிலா சத்யானந்த், “தமிழக அரசு பரிந்துரைத்த மொழிபெயர்பாளர்களை நியமித்ததாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுவது தவறு. நீட் வினாத்தாளை தமிழில் மொழிபெயர்க்க தமிழக அரசு மொழிபெயர்பாளர்களை நியமிக்கவில்லை. சிபிஎஸ்இ தாமாகவே மொழிபெயர்பாளர்களை நியமித்துக் கொண்டது” என கூறினார்.

    Next Story
    ×