search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை - அமித்ஷா சொல்கிறார்
    X

    பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் இல்லை - அமித்ஷா சொல்கிறார்

    பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #Parliamentelections #AmitShah

    ஐதராபாத்:

    பாராளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகிறது. இதனால் ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாராளுமன்றத்துக்கு மத்தியபிர தேசம், சதீஷ்கர், ராஜஸ்தான், மிசோரம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநில சட்டசபையோடு முன்கூட்டியே தேர்தல் நடத்தப் போவதாக தகவல் வெளியானது.

    பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் பலரும் பாராளுமன்றத்துக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து பேசி வந்தனர்.

    இந்த நிலையில் பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தும் திட்டம் இல்லை என்று பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

    தெலுங்கானா மாநில பா.ஜனதாவினரை அமித்ஷா சந்தித்து பேசினார். அவர்களிடம் பேசுகையில், ‘பாராளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படமாட்டாது.

    ஏற்கனவே திட்டமிட்டப் படி இருக்கும் தேதியில் தான் நடைபெறும் 2019 தேர்தலுக்கான தெலுங்கானாவில் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும் என்றார்.

    இந்த தகவலை தெலுங்கானா மாநில பா.ஜனதா பொதுச் செயலாளர் பரமேந்தர் ரெட்டி நிரூபர்களிடம் தெரிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமித்ஷா கூறியதாக பா.ஜனதா தேசிய உறுப்பினர் பெரனா சேகர்ராவ் தெரிவித்துள்ளார். #Parliamentelections #AmitShah

    Next Story
    ×