search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்காளத்தில் தாதாக்கள் ராஜ்ஜியம் - பாஜக தலைவர் அமித்ஷா கடும் தாக்கு
    X

    மேற்கு வங்காளத்தில் தாதாக்கள் ராஜ்ஜியம் - பாஜக தலைவர் அமித்ஷா கடும் தாக்கு

    மேற்கு வங்காளத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தலைவர் அமித்ஷா பேசுகையில், இங்கு தாதாக்கள் ராஜ்ஜியம் நடைபெற்று வருகிறது என கடுமையாக சாடியுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    கொல்கத்தா:

    பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்காள மாநிலத்துக்கு சென்றுள்ளார். அங்கு புரூலியா பகுதியில் பா.ஜ.க. சார்பில் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

    வன்முறை என்பது வங்காளத்தின் கலாசாரம் அல்ல. இந்த மாநிலத்தில் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர், பங்கிம் சந்திர சட்டோபாத்யா உள்ளிட்ட பலர் அவதரித்துள்ளனர். ஆனால், மம்தா பானர்ஜி இங்கு வன்முறை கலாசாரத்தை நிறுவியுள்ளார்.

    சமீபத்தில் இங்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் 20-க்கும் மேற்பட்ட பாஜக தொண்டர்கள் கொல்லப்பட்டுள்ளனர். நடுநிலை மக்களை ஓட்டளிக்க அரசு அனுமதிக்கவில்லை. இங்கு குண்டர்கள் ராஜ்யம் நடக்கிறது. வெடிகுண்டுகள் தயாரிப்பு இங்கு பெருகி வருகிறது. மணல், நிலக்கரி கொள்ளை அதிகரித்துள்ளது. மாநில வளர்ச்சிக்கு பதில் இங்கு குண்டர்களின் வளர்ச்சியே அபாரமாக உள்ளது.

    மத்திய நிதி கமிஷனில் இருந்து மத்திய அரசு 3. 6 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. ஆனால் இந்த நிதி மக்களுக்கு சென்று சேரவில்லை. மோடி தலைமையிலான ஆட்சியில் மட்டுமே வளர்ச்சியை காண முடியும்.

    மேற்கு வங்காளத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக உருவாகி வருகிறது. விரைவில் பாஜக இங்கு ஆட்சியை பிடிக்கும் என குறிப்பிட்டுள்ளார். #AmitShahinPurulia #MamataBanerjee
    Next Story
    ×