search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும் என்பதால் ஆளுநர் முடிவிலும் தலையிடலாம் - காங்கிரஸ் வழக்கறிஞர்
    X

    குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும் என்பதால் ஆளுநர் முடிவிலும் தலையிடலாம் - காங்கிரஸ் வழக்கறிஞர்

    காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும் என்பதால் ஆளுநர் முடிவிலும் தலையிடலாம் என வாதாடினார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress

    பெங்களூர்:

    கர்நாடகாவில் நேற்று முன்தினம் வெளியான சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. 104 இடங்களில் வென்ற பாஜக ஆட்சியமைக்க ஆளுநரை சந்தித்து உரிமை கோரியது.  

    இந்நிலையில், திடீர் திருப்பமாக பாஜகவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க அம்மாநில கவர்னர் அழைப்பு விடுத்துள்ளதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் நாளை காலை 9 மணிக்கு எடியூரப்பா பதவி ஏற்பார் என்பதால் அதற்கு முன்னதாக வழக்கை விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. 

    இதையடுத்து காங்கிரஸ் அளித்த மனு குறித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா, பதிவாளருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது காங்கிரஸ் அளித்த மனுவை இரவே விசாரிக்க முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இரவு 1.45 மணிக்கு ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண், எஸ்.ஏ.பாப்டே ஆகிய 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு காங்கிரசின் மனுவை விசாரித்தது. உச்சநீதிமன்ற அறை எண் 6-ல் விசாரணை நடைபெற்றது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் உச்சநீதிமன்றம் வந்துள்ளார்.

    அப்போது ஆளுநர் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, அதிக இடங்களில் வெற்றி பெற்ற கட்சியை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார், ஆளுநர் உத்தரவில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என வாதாடினார். 

    காங்கிரஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, ஜார்கண்ட் மற்றும் கோவாவில் நடந்த விவகாரங்களை சுட்டிக்காட்டி வாதாடினார். அவர், 104 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைத்தது அரசியலமைப்புக்கு விரோதமானது. நாங்கள் ஆளுநரை எதிர்க்கவில்லை, அவரின் முடிவை தான் எதிர்க்கிறோம், என கூறினார்.

    எடியூரப்பாவுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டதற்கு சிங்வி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் யாருக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் என சர்க்காரியா கமிஷன் அறிக்கையை சுட்டிக்காட்டி சிங்வி வாதாடினார். தொடர்ந்து வாதாடிய சிங்வி, டெல்லி, கோவா உட்பட 7 மாநிலங்களில் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணிதான் ஆட்சியை அமைத்தது. டெல்லியில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற போதும் ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. குடியரசு தலைவர் முடிவிலேயே நீதிமன்றம் தலையிட முடியும். எனவே ஆளுநர் முடிவிலும் நீதிமன்றம் தலையிடலாம், என அவர் கூறினார்.

    ஆளுநர் முடிவில் தலையிட வேண்டாம், பதவி ஏற்பு விழாவை தற்காலிகமாக ஒத்திவையுங்கள் என சிங்வி கோரிக்கை விடுத்தார். ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாதிட்ட சிங்வியின் வாதத்தை முடித்துக்கொள்ளுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் தனது வாதத்தை முடித்துக்கொண்டார். #KarnatakaElection #KarnatakaCMRace #BJP #Congress
    Next Story
    ×