search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    X

    மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தல் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    மேற்கு வங்க மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து நடைபெற உள்ள நிலையில், அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. #WestBengalPolls #panchayatelections

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலத்தில் நாளை பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. 58 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் உள்ள அம்மாநிலத்தின் 38,605 இடங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது. 621 ஜில்லா பரிஷத், 6,157 பஞ்சாயத்து சமிட்டி மற்றும் 31,827 கிராம பஞ்சாயத்துகளுக்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறும் என அம்மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    அம்மாநிலத்தில் இருக்கும் 3,358 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 48,650 இடங்களில், 16,814 இடங்களிலும், 341 பஞ்சாயத்து சமிட்டிகளில் உள்ள 9,217 இடங்களில், 3,059 இடங்களிலும், 20 ஜில்லா பரிஷத்தில் உள்ள 825 இடங்களில், 203 இடங்களிலும் யாரும் போட்டியிடவில்லை. இதனால் அங்கு நாளை வாக்குப்பதிவு நடைபெறாது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    இத்தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணிகளுக்காக அசாம், ஒடிசா, சிக்கிம், ஆந்திரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர 46 ஆயிரம் மாநில போலீசார் மற்றும் 12 அயிரம் கொல்கத்தா போலீசாரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். #WestBengalPolls #panchayatelections
    Next Story
    ×