search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு ‘சீல்’ - சி.பி.ஐ. நடவடிக்கை
    X

    நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு ‘சீல்’ - சி.பி.ஐ. நடவடிக்கை

    வங்கி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு சி.பி.ஐ. நேற்று ‘சீல்’ வைத்தது. #PNBScam #NiravModi
    மும்பை:

    வங்கி மோசடி வழக்கின் முக்கிய குற்றவாளியான வைர வியாபாரி நிரவ் மோடியின் பண்ணை இல்லத்துக்கு சி.பி.ஐ. நேற்று ‘சீல்’ வைத்தது. மும்பையில் இருந்து 100 கி.மீ. தொலைவில், அலிபாக் என்ற இடத்தில் அரபிக்கடலை ஒட்டி 1½ ஏக்கர் பரப்பளவில் இந்த பண்ணை இல்லம் அமைந்துள்ளது.

    கடந்த 2004-ம் ஆண்டு, ரூ.32 கோடிக்கு நிரவ் மோடி இதை வாங்கினார். தனது நகைகளை வாடிக்கையாளர்களுக்கு காட்டுவதற்காக இங்கு அவர் அவ்வப்போது விருந்து நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

    பண்ணை இல்லத்தில், 5 படுக்கையறைகளுடன் 12 ஆயிரம் சதுர அடியில் மிகப்பெரிய பங்களா அமைந்துள்ளது. பெரிய நீச்சல் குளம், தியேட்டர், நூலகம் ஆகியவையும் உள்ளன. நிரவ் மோடி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய ஆவணங்களை வைத்து இந்த சொத்தை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. #PNBScam #NiravModi
    Next Story
    ×