search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் அக். 2-ம் தேதி தொடக்கம்
    X

    பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் அக். 2-ம் தேதி தொடக்கம்

    மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் வரும் அக்டோப்பர் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று தொடங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
    புதுடெல்லி:

    2018-19 நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லி நேற்று தாக்கல் செய்தார். ஏழை எளிய மக்களுக்காக நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தேசிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படும் என அவர் அறிவித்தார். 10 கோடி பேர் தலா 5 லட்சம் ரூபாய் அளவில் காப்பீடு பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த திட்டம் வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி (காந்தி ஜெயந்தி) முதல் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை இதற்காக ஒதுக்கப்படும் என நிதி ஆயோக் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    ஒரு குடும்பத்துக்கு 1000 ரூபாய் முதல் 1200 ரூபாய் வரை இதற்கான ப்ரீமியம் செலுத்த வேண்டியதிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×