search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரியாக பாடம் படிக்காததால் சிறுவனை நாற்காலியில் கட்டிப்போட்டு சித்ரவதை
    X

    சரியாக பாடம் படிக்காததால் சிறுவனை நாற்காலியில் கட்டிப்போட்டு சித்ரவதை

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள நவஜீவனி சிறப்பு பள்ளியில் சரியாக பாடம் படிக்காததால் சிறுவனை நாற்காலியில் கட்டிப்போட்டு ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்டியாலா:

    பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நவஜீவனி சிறப்பு பள்ளியில் 125-க்கும் மேற்பட்ட சிறுவர்-சிறுமிகள் கல்வி பயின்று வருகிறார்கள்.

    இங்கு சில நாட்களாக சம்பள உயர்வு கேட்டு ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இது பற்றி செய்தி சேகரிக்க உள்ளூர் பத்திரிகையாளர்கள் சென்றனர். அப்போது அங்கு ஒரு வகுப்பறையில் ஒரு சிறுவனை நாற்காலியில் கட்டிப் போட்டு வைத்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்,

    விசாரித்த போது அந்த சிறுவன் சரியாக படிக்காததால் ஆசிரியர்கள் அவனை நாற்காலியில் கட்டிப்போட்டு பாடம் சொல்லிக் கொடுப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே வகுப்பறையில் சிறுவன் கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கும் வீடியோ உள்ளூர் தொலைக்காட்சிகளிலும், சமூக வலை தளங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. சிறுவனை கட்டிப்போட்டு சித்ரவதை செய்வதா என்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி பள்ளி முதல்வர் சசி பாலாவிடம் கேட்ட போது, நான் மாணவரை இதுபோல் சித்ரவதை செய்யவில்லை. போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் தான் இது போன்ற செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்றார்.

    பாட்டியாலா மாவட்ட கலெக்டர் கூறும் போது, சிறுவன் கட்டிப்போடப்பட்ட நிலையில் இருக்கும் வீடியோவை நானும் பார்த்தேன். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறுவனை தவறாக நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×