என் மலர்

  செய்திகள்

  மராட்டிய மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி கண்டுபிடிப்பு
  X

  மராட்டிய மாநிலத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி கண்டுபிடிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மராட்டிய மாநிலத்தில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறாக ஓட்டுகள் பதிவானது உறுதியாகி உள்ளது.
  மும்பை:

  மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் செய்தனர். இந்த பிரச்சினைக்கு இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில், மராட்டிய மாநிலத்தில் ஒரு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தவறாக ஓட்டுகள் பதிவானது உறுதியாகி உள்ளது.

  அந்த மாநிலத்தில் ஜூன் 16-ந் தேதி நடைபெற்ற புல்தானா மாவட்ட கவுன்சில் தேர்தலில் லோனார் நகரம் சுல்தான்பூரில் உள்ள ஒரு வாக்குசாவடியில் பாதிக்கப்பட்ட சுயேச்சை வேட்பாளர் ஆஷா அருண்ஜோர் புகாரின்பேரில் அனில் கால்கலி என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்ற தகவலில் இது உறுதியாகி உள்ளது.

  ஆஷாவுக்கு தேங்காய் சின்னம் ஒதுக்கப்பட்டு இருந்தது. முதல் இடத்தில் இருந்த அவரது சின்னத்தில் வாக்காளர்கள் ஓட்டு போட்டால், 4-வது இடத்தில் இருந்த பா.ஜனதாவின் தாமரை சின்னத்தில் ஓட்டுகள் பதிவானதாக சிக்னல் விளக்கு எரிந்தது. இதுபற்றி ஆஷா காலை 10 மணிக்கே புகார் செய்தும், மதியம் 1.30 மணிக்கு தான் அதிகாரிகள் இதுபற்றி கவனித்தனர். பின்னர் அந்த எந்திரத்துக்கு சீல் வைத்து, அந்த தொகுதியில் தேர்தலை ரத்து செய்து பின்னர் வேறு ஒரு நாளில் மறுதேர்தல் நடந்துள்ளது. 
  Next Story
  ×