என் மலர்

  செய்திகள்

  நாகலாந்து சட்டசபையில் பலப்பரீட்சை: 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி
  X

  நாகலாந்து சட்டசபையில் பலப்பரீட்சை: 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாகலாந்து சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 47 வாக்குகள் பெற்று முதல்வர் ஜெலியாங் வெற்றி பெற்றுள்ளார்.

  கவுகாத்தி:

  நாகலாந்தில் நிலவிவந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 19-ம் தேதி முதல்வராக ஜெலியாங்கிற்கு ஆளுநர் ஆச்சாரியா பதவிபிரமாணம் செய்து வைத்தார். வருகிற 22-ம் தேதிக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறும் ஆளுநர் உத்தரவிட்டிருந்தார்.

  அதைதொடர்ந்து, 60 எம்.எல்.ஏ.க்களை கொண்ட நாகலாந்து சட்டசபையில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஜெலியாங் 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவருக்கு ஆதரவாக பா.ஜ.க. (4), நாகலாந்து மக்கள் முன்னணி (36), சுயேட்சைகள் (7) என மொத்தம் 47 எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்துள்ளனர்.
   
  இதன்மூலம், ஜெலியாங் தலைமையிலான அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.
  Next Story
  ×