என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திரப்பிரதேசம்: குடும்பத்துடன் குளித்தபோது கடலில் மூழ்கி 2 குழந்தைகள் பலி
Byமாலை மலர்24 Jun 2017 12:33 PM GMT (Updated: 24 Jun 2017 12:33 PM GMT)
ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மங்கினபுடி பகுதியில் குடும்பத்துடன் குளித்தபோது கடலில் மூழ்கி 2 குழந்தைகள் பலியாகினர்.
மசூலிப்பட்டணம்:
ஆந்திரா மாநிலம் மசூலிப்பட்டணத்தின் குட்லாவல்லேரு மண்டலில் உள்ள வட்லாமன்னாடு கிராமத்தை சேர்ந்த தம்பதியருக்கு சந்தீப், வித்யா என பதின்பருவ வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்த தம்பதியர் தங்களது குழந்தைகளுடன் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மங்கினபுடி கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தனர்.
அப்போது கடலில் திடீரென எழுந்த பெரிய அலை, அந்த தம்பதியரையும், இரண்டு குழந்தைகளையும் கடலின் உள்ளே இழுத்துச் சென்றது. இதனால் கடலில் மூழ்கிய அவர்கள் அலறி துடித்தனர்.
அந்த சமயத்தில் அங்கு வந்த புகைப்படக்காரர்கள் சிலர், அந்த தம்பதியரை விரைந்து மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் இரு குழந்தைகளையும் அவர்களால் மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில் குழந்தைகளின் பிரேதங்கள் கடற்கரையில் ஒதுங்கியது.
தகவலறிந்த மசூலிப்பட்டினம் போலீசார் குழந்தைகளின் பிரேதங்களை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story
×