search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளம் அருகே வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடைவிழா - பறவை காவடியை காண திரண்ட பக்தர்கள்
    X

    பறவைக்காவடி எடுத்து வந்த பக்தர்கள்.

    ஆலங்குளம் அருகே வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடைவிழா - பறவை காவடியை காண திரண்ட பக்தர்கள்

    • ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை தொட ங்கியது.
    • காவடி வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பறவை காவடியுடன் வலம் வந்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள அருணாசலபுரம் வடக்குவா செல்வி அம்மன் கோவில் கொடை விழா கடந்த திங்கள்கிழமை தொட ங்கியது. இதையொட்டி குற்றாலத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல், கும்பாபிஷேகம், 501 விளக்குப் பூஜை, சாஸ்தா பிறப்பு நிகழ்ச்சி மற்றும் கடையநல்லூர் தொப்பை பெருமாள் குழுவினரின் வில்லிசை, பரமகுடி சுந்தர் குழுவினரின் கிராமிய பல்சுவை நிகழ்ச்சி ஆகியவை நடைபெற்றன.

    2-ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு நெட்டூர் அப்ரானந்த சுவாமி கோவிலிலிருந்து பறவை காவடி எடுத்து வரும் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலிலிருந்து புறப்பட்ட பறவை காவடி, சாலை மார்க்கமாக பிரதான சாலை வழியாக வந்து கோவிலை அடைந்தது. இதையடுத்து அங்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    காவடி வலம் வரும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, பறவை காவடியுடன் வலம் வந்தனர். மேலும், வழி நெடுகிலும் பக்தர்கள் பறவை காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து, நண்பகல் 12 மணிக்கு உச்சிகாலபூஜை, பிற்பகல் 1 மணிக்கு மாபெரும் அன்னதானம், மாலை 4 மணிக்கு முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தல், ஊர் விளையாட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூக்குழி இறங்குதல், தொடர்ந்து சாம பூஜை ஆகியவை நடைபெற்றன.

    3-ம் நாள் திருநாளான புதன்கிழமையான இன்று காலை 8 மணிக்கு முளைப்பாரி கரைத்தல், தொடர்ந்து மஞ்சள் நீராடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×