என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கீழக்கடையம் உடையார் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேக விழா-திரளான பக்தர்கள் பங்கேற்பு
- உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
- நாளை (திங்கட்கிழமை) முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது.
கடையம்:
தென்காசி மாவட்டம் கீழக்கடையத்தின் வடக்கு பகுதியில் அமைந்துள்ளது உடையார் பிள்ளையார் கோவில். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவில் புராணச் சிறப்பு கொண்ட கோவிலாகும். அகஸ்திய ரால் வழிபடப்பட்ட பெரு மை வாய்ந்த ஆலயமாகும்.
இந்த கோவிலுக்கான கும்பாபிஷேத்திற்காக கடந்த 10-ந்தேதி கால் நடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை மங்கள இசை, விக்னேஷ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், பிரம்மசாரி பூஜை, கோ பூஜை, கஜபூஜை, தீபாராதனை பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது.
பின்னர் பாபநாசத்தி லிருந்து 108 தீர்த்த குடம் கொண்டு வரப்பட்டது.இதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் சிலை நிறுவுதல் நடைபெற்றது. பின்னர் இன்று அதிகாலையில் மங்கள வாத்தியம், திருமுறை பாராயணம், இரண்டாம் கால யாக பூஜை, கண்திறப்பு, தீபாராதனை நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து விமான கோபுர கும்பாபிஷேகம், உடையார் பிள்ளையார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.விழாவில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நாளை திங்கட்கிழமை முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 18 பட்டி ஊர் பொதுமக்கள் மற்றும் யு.சி.சி நண்பர்கள் செய்துள்ளனர்.